
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். அதோடு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். இதனையடுத்து நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளதோடு காலை நேரத்தில் பனிமூட்டம் நிலவும்.
இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகமாக இருக்கும். இதேபோன்று பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வறண்ட வானிலை நிலவும். மேலும் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.