
கோயம்புத்தூர் மாவட்டம் சாய்பாபா காலனி சண்முகம் வீதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான ஆயிஷா ஷர்மி ஜகான்(29) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி ஆயிஷாவை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட ஆல்யா என்ற பெண் வெப்சைட்டுகளுக்கு மதிப்பு கொடுக்கும் ஆன்லைன் பகுதி நேர வேலை வாய்ப்பு உள்ளது. அதில் சேர்ந்து வேலை பார்த்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறினார்.
இதனை நம்பி ஆயிஷா அவர்கள் கூறியபடி டாஸ்கை முடித்துக் கொடுத்ததும் சிறிய தொகை லாபம் கிடைத்தது. இதனை நம்பி பல்வேறு தவணைகளாக ஆயிஷா 5 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால் அந்த பணம் கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சாயிஷா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடி செய்த நபர்களை தேடி வருகின்றனர்.