தமிழகத்தை சேர்ந்த அரசு மருத்துவர் அரசு மருத்துவக் கல்லூரியில் இணை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பங்குச் சந்தை தொடர்பான தகவல்களைக் கற்றுக் கொள்ளும் வாட்சப் குழுவில் உறுப்பினராக இணைந்தார். அந்த குழுவின் அட்மின் திவாகர் சிங் என்பவர், குறைந்த நாட்களில் அதிக லாபம் பெற வாய்ப்புள்ளது எனக் கூறினார். இது பங்கு சந்தை முதலீடு தொடர்பான குழு என்பதால், மருத்துவர் அதை நம்பியுள்ளார்.

ஆரம்பத்தில் குறைந்த தொகை முதலீடு செய்த மருத்துவருக்கு நல்ல லாபம் கிடைத்ததால்,  ரூ.76.5 லட்சத்தை  முதலீடு செய்தார். பின்னர் யூடியூப் விளம்பரத்தை கிளிக் செய்ததால் அரசு மருத்துவர் பணத்தை இழந்துள்ளார். மோசடிகாரர்கள் விரித்த வலையில் மருத்துவர் சிக்கினார். அக்டோபர் 27 ஆம் தேதி அவர் வங்கியில் இருந்து பணத்தை எடுக்க முயன்றபோது, தனது கணக்கில் பணமில்லை என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, மோசடி நடந்தது தெரியவந்தது.