தமிழக பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்த நிலையில் நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று இரவு 10 மணி வரையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அதன்படி கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று தூத்துக்குடி, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது‌