தமிழகத்தில் பருவ மழை பெய்து வருவதால் கொசுக்களால் ஏற்படும் டெங்கு உள்ளிட்ட பாதிப்புகள் சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த வருடத்தில் மட்டும் 25 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போது பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன் பிறகு டெங்கு காய்ச்சலால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக மழையின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் டெங்கு பாதிப்புகளும் அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதோடு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளும் நடந்து வருகிறது.‌ இந்நிலையில் பொதுமக்களும் கொசுவை ஒழிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதன்படி ‌ வீட்டை சுற்றி உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காத அளவுக்கு பார்த்துக் கொள்வதோடு, குடிநீரை சுத்தமான முறையில் காய்ச்சி குடிப்பதோடு தண்ணீரை நன்கு மூடி வைக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு மற்றும் மருத்துவ சந்தேகங்களுக்கு 104 என்ற நம்பரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் வெளியிட அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.