அவசர மருத்துவ உதவிகளுக்கு மக்கள் ஆம்புலன்ஸை தொடர்பு கொள்கின்றனர். தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதுடன் வாகன இருப்பிடத்தை அறியும் வகையில் மேப் இணைப்புடன் கூடிய புதிய வசதி அறிமுகமாக உள்ளது.

ஒருவர் ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டதும் அவரது மொபைல் எண்ணுக்கு ஓட்டுனரின் தொடர்பு எண் மேப்புடன் SMS அனுப்பப்படும். அதில் பயனாளிகள் தங்கள் லொகேஷன் பகிரலாம். இதனால் ஓட்டுனர் பயனாளிகள் இருப்பிடத்தை குழப்பம் இன்றி அறிந்து சம்பவ இடத்திற்கு வேகமாக வந்தடைய முடியும்.