
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி காரைக்காலிலும் மார்ச் 23-ஆம் தேதி வரை லேசான முதல் மிதமான மழை பெய்யப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் மார்ச் 22 ஆம் தேதி வரை வெப்பநிலையில் மாற்றம் இருக்காது எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது