
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வந்த நிலையில் இன்றும் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மட்டும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.