
புதிய வருமான வரி மசோதா 2025 மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அது ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலை குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். வக்பு திருத்த மசோதா மீதான கூட்டுக்குழு அறிக்கை மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
60 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வருமான வரி சட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் புதிய எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி மோசோதாவை தாக்கல் செய்ய உள்ளார். கடந்த ஒன்றாம் தேதி மத்திய அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என கூறியிருந்தார். அதன்படி புதிய வருமான வரி மசோதாவிற்கு வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இன்று மக்களவையில் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. மசோதா நிறைவேறினால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.