
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் சீரும் சிறப்புமாக நடைபெற்று முடிந்தது. விஜயின் பேச்சு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அவர் அரசியல் கட்சிகளை நேரடியாக விமர்சித்து பேசினார். மேலும் தங்களது கட்சியின் கொள்கை குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். இந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் விஜய்க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் பேச்சை முடித்திருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் திரு விஜய் அண்ணா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு மற்றும் சாதி, மத, வர்க பிரிவினை வாதத்திற்கும், ஊழலுக்கும் எதிராக செயல்பட போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். மகிழ்ச்சி என முதல் நபராக தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார். இது மட்டுமில்லாமல் விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், சாக்ஷி அகர்வால், சூரி என பிரபலங்களும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.