உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கிய நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதியோடு நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் 68 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். இந்நிலையில் மகா கும்பமேளாவில் பெண்கள் குளிக்கும் வீடியோவை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது புனித நீராடும் பெண்களை அவர்களுக்கே தெரியாமல் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து அதனை ஆன்லைனில் விற்பனை செய்து வந்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் உத்திரபிரதேச மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதாவது பெண்கள் குளிக்கும் வீடியோவை டெலிகிராம் உள்ளிட்ட செயலி மூலம் விற்பனை செய்து வந்த நிலையில் இந்த வீடியோவுக்களை யூடியூபில் பதிவேற்றம் செய்த அமித் குமார் ஜா (27) என்பவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இவர் பெண்கள் குளிக்கும் வீடியோ மற்றும் உடைமாற்றும் வீடியோ போன்றவற்றை யூட்யூபில் வெளியிட்டார். இவர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரிடமிருந்து ஒரு ஆண்ட்ராய்டு போனை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவரை கைது செய்த போலீசார் வேறு யாருக்கேனும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.