
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையில் ஆன கூட்டணி மொத்தம் 230 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. அதன் பிறகு காங்கிரஸ் கூட்டணி குறைந்த அளவிலான தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா தேர்தலில் ஒரு ஆச்சரியம் நடந்துள்ளது. அதாவது நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் 48 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 30 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் பாஜக கூட்டணி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் அதிக அளவிலான வாக்குகளை பெற்று பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதன் பிறகு நந்தெத் பகுதியில் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் சவன் ரவீந்திர வசந்த் ராவ் 1457 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இதே தொகுதிக்கு உட்பட்ட 6 தொகுதி சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டு போட்ட மக்கள், சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு ஓட்டு போட்டுள்ளனர். இந்த விஷயம் தான் தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது. மேலும் இந்த தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டி பாஜகவை விமர்சித்து வருகிறார்கள்.