
சூதாட்ட செயலி மோசடி தொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. மகாதேவ் என்ற சூதாட்ட செயலி மோசடி புகாரில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. சௌரப் சந்திரகர் என்பவர் மகாதேவ் செயலி மூலம் சூதாட்டம் நடத்தி மோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. சூதாட்ட செயலி மோசடி வழக்கில் ரூ 417 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Actor Ranbir Kapoor summoned by Enforcement Directorate on 6th October, in connection with Mahadev betting app case
(file photo) pic.twitter.com/K8DZhME5RK
— ANI (@ANI) October 4, 2023