ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் சிவ்லால் மேக் வால் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கவிதா (32) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருந்துள்ளனர். இவர்களது இளைய மகன் ராம்தேவுக்கு எட்டு வயதாகிறது. இந்நிலையில் இந்த குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் கடந்த செவ்வாய்க்கிழமை தண்ணீர் டேங்கில் குதித்து திடீரென தற்கொலை செய்து கொண்டனர்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக கவிதா தன்னுடைய இளைய மகனுக்கு பெண் வேடமிட்டு கண்களில் மை பூசி முக்காடு அணிந்து அழகு பார்த்துள்ளார். அதன் பிறகு அவர்கள் நான்கு பேரும் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சிவ்லால் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.

அந்த கடிதத்தில் தற்கொலைக்கு மூன்று பேர் காரணம் எனவும் அதில் தன்னுடைய சகோதரரும் ஒருவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலம் மற்றும் வீட்டின் உரிமை தொடர்பாக பல வருடங்களாக நடந்த சண்டையை இந்த முடிவுக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் தனி வீடு கட்ட சிவ்லால் விரும்பிய நிலையில் அதற்கு அவரது தாயும் சகோதரரும் எதிர்ப்பு தெரிவித்ததாக கவிதாவின் மாமா கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.