மொத்தமுள்ள சட்டமன்றங்களில் குறைந்தபட்சம் 50 சதவீதம் சட்டமன்றங்கள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். 33 சதவீதம் மகளிர் இட ஒதுக்கீடு 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். மக்களவைத் தொகுதிகளை மறு வரையறை செய்ய வேண்டும்.

அதன் பிறகு தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அந்த நேரத்தில் தான் இட ஒதுக்கீடு அமலுக்கு வரும். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு மக்களவைத் தொகுதிகளை மறு வரையறை செய்யும் பணி 2026 ஆம் ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அமலுக்கு வராது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.