
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி நடைபெற்ற நிலையில் இந்திய அணி சிறப்பாக விளையாட இறுதி போட்டி வரை முன்னேறி வந்தது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி சீனாவுடன் மோதியது. இந்த போட்டியில் சீனாவை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. இந்திய அணியின் வெற்றிக்கு தீபிகா அடித்த ரிவர்ஸ் ஹிட் கோல் காரணமாக அமைந்தது.
முன்னதாக லீக் சுற்றிலும் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்திய மகளிர் அணி மூன்றாவது முறையாக ஆசிய சாம்பியன் ஹாக்கி போட்டி பட்டதை வென்றுள்ளது. மேலும் முன்னதாக ஆடவர் ஆசிய சாம்பியன் ஹாக்கி போட்டி நடைபெற்ற நிலையில் அந்த போட்டியிலும் இந்திய ஆடவர் அணி தான் கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.