தமிழகத்தில் பெண்களுக்கு ஆயிரம் வழங்கும் உரிமை தொகைத்திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.   இந்நிலையில் மகளிர் உரிமை தொகை ரூ.1000க்கான விண்ணப்பங்களை இன்று முதல் 4ம் தேதிவரை ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யவுள்ளனர்.

குறிப்பாக, டோக்கன் விநியோகம் செய்யும்போது, இறப்பு, வீட்டில் ஆள் இல்லாதவர்கள், விண்ணப்பம் வேண்டாம் என மறுப்பு தெரிவிப்போர் விவரங்களை குறித்து வைக்கவும், 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு நாளைக்கு 60% விண்ணப்பம், டோக்கன் விநியோகம் செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது.