
பாகிஸ்தான் நாட்டில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தன்னுடைய மகளின் தலையில் ஒரு தந்தை கேமரா மாட்டியுள்ளார். அந்த கேமராவை வைத்து தன் மகள் எங்கெல்லாம் செல்கிறார், யாருடன் பேசுகிறார், என்ன செய்கிறார் போன்றவற்றையெல்லாம் கவனித்து வருகிறார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.
அப்போது தன் தலையில் கேமரா மாட்டி வீட்டில் இருந்தபடியே தன்னைத் தந்தை கண்காணிப்பதாக கூறினார். அதோடு தன்னை பாதுகாப்பதற்காக தான் தந்தை அப்படி செய்வதாகவும் இதனால் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய தந்தை எது செய்தாலும் தன்னுடைய நல்லதுக்காக தான் என்று அந்த பெண் கூறியுள்ளார். இருப்பினும் அந்த தந்தையின் செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Pakistan🫡😭
pic.twitter.com/Hdql8R2ejt— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 6, 2024