மகர ராசி அன்பர்களே,
இன்று சிந்தித்துச் செய்யும் பணிகளில் மட்டுமே வெற்றி கிடைக்கும். யாரையும் சந்தேகப்பட வேண்டாம். கணவன் மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப்பெறும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் பற்று வரவுகள் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை முடிப்பீர்கள். ஆன்மீக செலவுகள் ஏற்படும் இந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவீர்கள். வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்துவீர்கள். இன்று பெண்கள் கோவில் குளங்களுக்கு சென்று வருவீர்கள். நிம்மதியான உறக்கத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
இன்று உத்தியோகஸ்தர்கள் பயணத்தின் போது கவனமாக இருங்கள். இன்று மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாக உள்ளது. லட்சிய நோக்கோடு கல்வியை அமைத்துக் கொள்வீர்கள். வெளிநாடு சென்று படிக்கும் யோகத்தையும் ஏற்படுத்திக் கொள்வீர்கள். இன்று விஷ்ணு பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : ஐந்து மற்றும் ஆறு
அதிஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்