
ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஓங்கோல் பகுதியில் செலவுக்கு பணம் கேட்ட மகனை ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்
ஓங்கோலில் இருக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் இருக்கும் மையத்திற்கு பாதுகாப்புக்காக ஆயுதப்படை காவலரான பிரசாத் என்பவர் சென்றார். அவரை மகன் கமல் டூவீலரில் அந்த மையத்திற்கு அழைத்து சென்று விட்டுள்ளார். அப்போது மகன் செலவுக்காக 20 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். எதற்காக இவ்வளவு பணம் என பிரசாத் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த பிரசாத் பாதுகாப்பு பணிக்காக வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டதால் கமல் அதே இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பிரசாத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.