பிரபல இயக்குனரான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா(49) மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனும், திரைப்பட நடிகருமான திரு.மனோஜ் பாரதிராஜா அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன் . அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

மகனை இழந்து ஆற்றொண்ணா துயரில் வாடும் திரு.பாரதிராஜா அவர்கள் இத்துன்பத்தில் இருந்து மீண்டு வரும் வலிமையை அளிக்க இறைவனை வேண்டுவதுடன், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.