கர்நாடக மாநிலத்தில் உள்ள ஜூலமேரா கிராமத்தில் ராமலிங்கயா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் கூலி வேலை செய்து வரும் நிலையில் அவருக்கு திருமணம் ஆகி ஜாலம்மா என்ற மனைவி இருக்கிறார். இதில் ஜாலம்மாவுக்கு ராமலிங்கம் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதோடு தன் மருமகளை அவர் 3 முறை பாலியல் பலாத்காரம் செய்யவும் முயற்சி செய்துள்ளார். இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் ராமலிங்கய்யாவுக்கு அறிவுரை கூறி வந்த நிலையில் அவர் சம்பவ நாளில் ஜாலம்மா வீட்டிற்கு சென்று அவரை தன் ஆசைக்கு இணங்கும்படி கூறியுள்ளார்.

இதனால் அவர் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்த நிலையில் ஆத்திரத்தில் அவர் ஒரு கட்டையால் தன் மருமகளின் தலையில் அடித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். அதற்குள் ராமலிங்கய்யா தப்பி ஓடிவிட்டார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த தப்பி ஓடிய மாமனாரை வலை வீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.