கரூர் மாவட்டத்திலுள்ள வெங்கமேடு மற்றும் வாங்கல் காவல் நிலையத்தில் செந்தூர் பாண்டியன் என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சொத்து பிரச்சனை காரணமாக ஒரு இளம் பெண் வாங்கல் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்தார். அப்போது இன்ஸ்பெக்டர் இளம்பெண்ணின் செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டார். அதன் பிறகு செந்தூரப் பாண்டியன் அடிக்கடி வாட்ஸ் அப் காலில் பெண்ணிடம் பேசி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு செந்தூர்பாண்டியன் இளம்பெண்ணிடம் புகார் கொடுத்தீர்களா? இது சம்பந்தமாக யாரும் உங்களிடம் பேசி இருந்தால் அந்த எண்ணை எனக்கு வாட்ஸ் அப்பில் போட்டு விடுங்கள் என கேட்டுள்ளார் .

பின்னர் வாட்ஸப் டிபியில் இருக்கும் போட்டோ சரியாகவே தெரிய மாட்டேங்குது. டிபியில் நன்றாக தெரியும் போட்டோவை வைக்க வேண்டியதுதானே என கேட்டுள்ளார். அதற்கு இளம்பெண் தெரிய வேண்டாம் என்றுதான் அவ்வாறு வைத்துள்ளேன் என கூறினார். உடனே இன்ஸ்பெக்டர் அப்படி வைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ப்ளீஸ் எனக்கு போட்டோ மட்டும் அனுப்புங்க மறந்துவிடாமல் அனுப்புங்கள் என கூறினார். ஒரு கட்டத்தில் இன்ஸ்பெக்டர் பேசுவதை அந்த பெண் மற்றொரு மொபைல் போன் மூலம் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் திருச்சி சரக டிஐஜி அருண்குமார் செந்தூர் பாண்டியனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார்.