தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் பாலிவுட் சினிமாவில் தற்போது பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். இது தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தை இயக்குனர் அட்லி மற்றும் அவருடைய மனைவி பிரியா ஆகியோர் தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தின் டைட்டில் டீசர் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக திகழும் கீர்த்தி சுரேஷ் பாலிவுட் சென்ற நிலையில் கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளார். முன்னதாக ஹோம்லி லுக்கில் மட்டும் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் பாலிவுட் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு அவ்வப்போது கவர்ச்சியாக தெரிய ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் நேற்று பிறந்த நாளை முன்னிட்டு சேலையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.