பிரபல கல்லூரியை சேர்ந்த 2 மாணவிகள் வாக்குவாதம் இட்டு சண்டையிடும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி நகைச்சுவைக்குள்ளானது.

2 மாணவிகளும் சண்டையிடும் போது அதைப்பார்த்த சகமாணவர்கள் ஆனந்தமாக ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு சமயத்தில் பேச்சு வார்த்தை கைக்கலப்பாக மாற தொடங்கியது. ஒருவரையொருவர் சரளமாக திட்டிக் கொண்டும் அருவருப்பான வார்த்தைகளை பேசிக்கொண்டும் சண்டை போட்டுக் கொண்டனர்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வந்த நிலையில் பல கருத்துக்களை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றன. அதில் ஒருவர் ‘இதுவரை நாங்கள் பார்த்திராத நவீன சண்டை இது’ எனக் கூறினார். மற்றொருவர் ‘இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு திறமையாக வாதாடிட தெரியும் என்பதற்கு இது ஒரு சான்று’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மற்றொருவர் ‘வழக்கமான சண்டையை விட இந்த சண்டை பார்ப்பதற்கு நகைச்சுவையாக உள்ளது’ என்று கூறியுள்ளார்.மாணவிகளின் அடையாளம் தெரியவில்லை என்றாலும் தங்களின் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும் பேச்சு வார்த்தை இணையதளத்தை மகிழ்விக்கும் விதமாக இருந்தது.

வீடியோவை காண

https://x.com/MithilaWaala/status/1904402268667216077