சிறையில் அடைக்கப்பட்ட ஜாகிர் உசேன் என்பவருக்கு கை கால் முடிவுக்கு சிகிச்சை வழங்க கோரி அவரது தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் தமிழ்நாடு காவல் நிலைய கழிவறைகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளதா? அப்படி என்றால் போலீஸ்காரர்கள் ஏன் வழுக்கி விழுவதில்லை?

ஏன் அவர்களுக்கு எலும்புகள் முறிவதில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கட்டு போடும் இது போன்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படும் என நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன் மற்றும் வி.லக்ஷ்மி நாராயணன் அமர்வு உத்தரவு பிறப்பித்தது