
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வித்யா என்ற 25 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு சோமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவு என்ற 27 வயது வாலிபருடன் கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. இதில் சிவு பெங்களூருவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்கள் சங்கராபுரம் பகுதியில் வசித்து வந்த நிலையில் கடந்த 30-ம் தேவி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் கோபத்தில் வித்யா வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து வித்யாவை தேடி வந்தனர்.
இந்நிலையில் அன்றைய தினம் இரவே ஒரு ரயில்வே தண்டவாளத்தின் அருகே வித்யா பிணமாக மீட்கப்பட்டார். உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் அவர் பிணமாக மீட்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையில் வித்யாவின் மரணத்திற்கு கணவன் தான் காரணம் எனவும் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் உறவினர்கள் வீட்டை முற்றுகையிட்டதோடு வித்யாவை அவர்தான் கொலை செய்திருக்க வேண்டும் எனவும் கூறினர். வித்யாவின் பெற்றோர் வரதட்சணை கொடுமையில் தங்கள் மகளை கொலை செய்து விட்டதாக கூறிய நிலையில் நேற்று சிவுவை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்ட அங்கு வீசப்பட்டாரா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.