தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் இரண்டு பெண் போலீசார் இடையே நேற்று முன்தினம் பணி செய்வது தொடர்பாக வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் ஆத்திரமடைந்த பெண் போலீஸ் ஒருவர் மற்றொரு பெண் போலீசை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

போலீஸ் நிலையத்தில் இரண்டு பெண் போலீசார் மோதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் உடனே அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் தகராறு ஈடுபட்ட ஒரு பெண் போலீசை ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திற்கும் மற்றொரு பெண் போலீசை திருவோணம் போலீஸ் நிலையத்திற்கும் தற்காலிகமாக பணியிட மாற்றம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.