
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சைபர் கிரைம் தாக்குதல்கள் என்பது அதிகரித்து விட்டது.
இந்த நிலையில் சைபர் கிரைம் சார்பில் மக்களுக்கு பத்திரிக்கை விளம்பரம் மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், அரசு அலுவலகத்தில் இருந்து E-Notice என்ற பெயரில் போலி இமெயில் மக்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் அந்த மின்னஞ்சலை கிளிக் செய்தால் அல்லது பதில் அளித்தால் சைபர் மோசடிக்கு ஆளாக நேரிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக 1930, cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.