ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து அழித்தது. நேற்று இரவு முதல் இந்திய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

அந்த தாக்குதலை இந்தியா முறியடித்தது அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ஜம்மு அருகே சம்பாவில் பாகிஸ்தான் இரண்டாவது நாளாக அத்துமீறி உள்ளது. இன்றும் தாக்குதல் முயற்சியை தொடங்கியுள்ளதால் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு அந்த தாக்குதலை முறியடித்தது.

முன்னதாக ஜம்மு நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது. சைரன் சத்தம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை நடத்தி வருகிறார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.