மத்திய பிரதேசம் மாநிலத்தில் 18 வயது வாலிபர் ஒருவர் தன்னுடைய பிழைப்புக்காக போர்வைகளை விற்பனை செய்து வந்தார். இந்த வாலிபர் ‌ போர்வைகளை அடுக்கி வைத்து ஸ்டண்ட் செய்துள்ளார். இவர் ஸ்டண்ட் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருடைய கழுத்து முறிந்தது. அதாவது இவர் சம்மர் சால்ட் அடிக்க முயன்ற போது தரையில் தலை மோதி கழுத்து உடைந்தது.

உடனடியாக அந்த வாலிபரை நண்பர்கள் மீட்டு  மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இதுபோன்ற ஆபத்தான ஸ்டண்ட் முயற்சிகளில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது. ஆனால் அந்த வாலிபர் ஆபத்தான ஸ்டண்ட் பயிற்சியில் ஈடுபட்டு கடைசியில் உயிரையே இழந்துவிட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.