
ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலுக்கு பிறகு இந்தியா பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதால் இருநாட்டு எல்லைகளிலும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவுரைப்படி உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் போர்க்கால ஒத்திகை தொடர்பான முன்னோட்டத்தில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இருநாட்டு எல்லைகளிலும் பதற்றத்தை தணிக்க ராணுவ நடவடிக்கைகளை இரு நாடுகளும் கைவிட வேண்டும் என ஐநா அறிவுறுத்தியது. ஐநாவின் பேச்சை வரவேற்றுள்ள பாகிஸ்தான் இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.