தமிழக விவசாயிகளின் 60 ஆண்டு கால கனவு திட்டமான அத்திக்கடவு அவிநாசி திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் மேற்கு மாவட்டங்கள் பயன்பெற இருக்கிறது. இந்நிலையில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடர்பாக அமைச்சர் முத்துசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, முதல்வர் ஸ்டாலின் தான் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரைந்து முடிக்க காரணம்.

இந்த திட்டத்தில் உபரி நீரை மட்டுமே எடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் இருக்கிறது. அதன் பிறகு அண்ணாமலை போராட்டம் அறிவித்ததால் தான் இந்த திட்டம விரைந்து தொடங்கப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால் அதெல்லாம் உண்மை கிடையாது. போதுமான தண்ணீர் வந்ததால் தான் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு ஒரு நாளை கூட வீணடிக்காமல் அதிகாரிகள் இரவு பகலாக உழைத்தனர் என்று கூறியுள்ளார்.