
டெல்லியில் ரிக்ஷா ஓட்டுனர் ஒருவர் 25 வயது இளம்பெண் ஒருவருக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் பிறகு பெண்ணை அவர் அடித்து அவர் அணிந்திருந்த தங்கச் செயினையும் கொள்ளையடித்து விட்டு தப்பித்து சென்றுஅர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். ரத்தக்காயத்துடன் இருந்த பெண்ணை மீட்டுள்ளனர். குற்றச் செயலில் ஈடுபட்ட இ-ரிக்ஷா ஓட்டுநர் உமர் (24) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.