
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அருகே உள்ள சாலையில் மது போதையில் இளைஞர் ஒருவர் காரை ஓட்டி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மார்ச் 3ஆம் தேதி ராமநாதபுரம் அருகே மது போதையில் இளைஞர் ஒருவர் சாலையில் அதிவேகமாக காரை ஓட்டி வந்துள்ளார். இதனால் அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் அந்த இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின் ஆத்திரத்தில் மீண்டும் அந்த இளைஞர் காரை அதிவேகமாக ஓட்டி வந்து சாலை ஓரத்தில் நின்றிருந்த மக்கள் மீது மோதியுள்ளார்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் நின்றிருந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.