
வங்காளதேச அணியின் மூத்த வீரர் முஷ்ரபிகுர் ரஹீம். இவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடைசி சில வாரங்கள் தனக்கு மிகவும் சவால் ஆனதாக இருந்ததாகவும், இனி ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்து இருப்பதாகவும் அறிவித்துள்ளார். 37 வயதான இவர் தற்போது ஓய்வு அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” நான் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து இன்று முதல் ஓய்வு தெரிவிக்கிறேன்.
இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். நான் நாட்டுக்காக எப்போதெல்லாம் ஆடினேனோ அப்போதெல்லாம் 100% என்னுடைய அர்ப்பணிப்போடும், நேர்மையோடும் இருந்தேன். இதுதான் எனது முடிவு என்பதை நான் உணர்ந்தேன். என்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர்கள், ரசிகர்கள் ஆகியோருக்கு நன்றி சொல்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.