
புதுச்சேரியில் பெண் ஒருவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரது 15 வயது மகளின் ஆபாச புகைப்படம் அந்த அலுவலகத்தில் பணிபுரிபவர்களின் செல்போனுக்கு திடீரென அனுப்பப்பட்டதால் அந்த பெண் மிகவும் அதிர்ச்சி அடைந்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் போட்டோவை அனுப்பியது பிரகாஷ் நாயக் (39) என்பதை கண்டறிந்தனர். மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும் ஒடிசாவுக்கு தப்பி ஓடி அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
பின்னர் போலீசார் ஒடிசா சென்று வாலிபரை கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. அதாவது இவர் ஆன்லைனில் பெண்களின் போட்டோவுக்கு லைக் செய்து அவர்களை வர்ணிப்பார். பின்னர் தனக்கு திருமணம் ஆகவில்லை என அந்த பெண்களிடம் கூறி அவர்களை ஆசை வலையில் வீழ்த்தி அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று தனிமையில் உல்லாசம் அனுபவிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
இதனை அந்த பெண்களுக்கே தெரியாமல் போட்டோ மற்றும் வீடியோ எடுக்கும் இவர் பின்னர் அதனை காட்டி அவர்களை மிரட்டி பணம் பறிப்பதையும் வழக்கமாக்கி வைத்திருந்தார். இவரால் 30க்கும் அதிகமான பெண்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவரது செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அவரை தற்போது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ள நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.