
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில், திஷா பதானி ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படத்தை ஸ்டூடியோவில் நிறுவனம் மற்றும் uvc creations நிறுவனம் இணைந்து தயாரித்து உள்ள நிலையில் தற்போது படம் ரிலீஸ் ஆகி 3 நாளில் 127.64 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்துள்ளதாக தற்போது படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
கங்குவா திரைப்படத்தின் முதல் 30 நிமிட காட்சிகள் சரியில்லை என்று விமர்சனங்கள் இருந்தாலும் அதன் பிறகு படம் நன்றாக வந்துள்ளது. படத்தில் சத்தம் கொஞ்சம் அதிகமாக இருப்பதும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. இருப்பினும் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில் 3 நாளில் நூறு கோடி வசூலை தாண்டி உள்ளது சூர்யா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இனிவரும் நாட்களில் வசூல் சாதனை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.