
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது எச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கும் நிலையில், பாபி தியோல், பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில் கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் ஜனநாயகன் நடிகர் விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த திரைப்படம் அரசியல் திரைப்படம் ஆக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் இன்று நள்ளிரவு 12 மணி அளவில் அதாவது நாளை நடிகர் விஜயின் பிறந்தநாள் என்பதால் இந்த நள்ளிரவு 12 மணி அளவில் முதல் பாடலை அதாவது படத்தின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிடுகின்றனர்.
Engal nenjil kudiyirukkum.. ❤️
Happy Birthday Lion #Thalapathy @actorvijay sir 🔥
The First Roar ▶️ https://t.co/Q981uzk8jA#HBDThalapathyVijay#JanaNayaganTheFirstRoar #JanaNayagan#HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @prakashraaj @menongautham… pic.twitter.com/5IgRaHIoxC
— KVN Productions (@KvnProductions) June 21, 2025
“>
இந்த அறிவிப்புக்காக அஸ்தமிக்கும் சூரியன் புகைப்படத்துடன் நடிகர் விஜய் இருப்பது போன்று போஸ்டரை பட குழு வெளியிட்டது. மேலும் இதன் காரணமாக முதல் பாடல் அரசியல் பாடலாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறும் நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் ரோர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
மேலும் இந்த பாடல் தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் டிரெண்டாகி வருகிறது.