
இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18 வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நிலையில் இந்தியா பாகிஸ்தான் போர் காரணமாக ஒரு வார காலத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போட்டி மீண்டும் கடந்த 17ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதியது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல் ராகுல் 112 ரன்கள் வரை எடுத்திருந்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் கில் ஆகியோர் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர்.
இதனால் எளிதாக இலக்கை எட்டிய குஜராத் அணி 19-வது ஓவரில் 205 ரன்கள் எடுத்தது. இதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது. குஜராத் அணியில் சாய் சுதர்சன் 108 ரன்களும், கில் 93 ரண்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேலும் இந்த வெற்றியின் மூலம் முதல் அணியாக குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.
இந்நிலையில் குஜராத் அணியின் வெற்றியின் மூலமாக அடுத்தடுத்து 2 அணிகளும் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. அதன்படி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பெங்களூரு அணி மற்றும் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணியும் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இதில் பஞ்சாப் அணி கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு அதாவது 2014ஆம் ஆண்டுக்கு பிறகு பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
மேலும் ஒரே நேரத்தில் மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதால் இன்னும் ஒரே ஒரு அணிக்கு மட்டும் பிளே ஆப் வாய்ப்பு இருக்கிறது. மேலும் 4-வது அணியாக யார் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது.