தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் விடா முயற்சி. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள நிலையில் இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அஜித் தற்போது கார் ரேஸில் பிஸியாக உள்ளார்.

கடந்த மாதம் துபாயில் நடந்த கார் பந்தயத்தில் கலந்துகொண்டு இவருடைய அணி வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக ஐரோப்பா கார் பந்தயத்தில் களமிறங்க அஜித் தயாராகி வருகின்றார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஏகே 64 படத்திற்கான கதையை அஜித் கேட்டு வரும் நிலையில் பல இயக்குனர்களிடம் கதையை கேட்ட பிறகு தற்போது கார்த்திக் சுப்புராஜ் சொன்ன கதை அஜித்துக்கு மிகவும் பிடித்துப் போனதால் அஜித்தின் ஏகே 64 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கப் போவது உறுதியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.