
ஒடிசாவை சேர்ந்த த்ரிஷ்னா ராய்(19) மிஸ் டீன் யூனிவர்ஸ் 2024 அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மிஸ் டீன் யூனிவர்ஸ் 2024 போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. அந்த போட்டியில் பெரு மற்றும் நமபியா அழகிகளை பின்னுக்கு தள்ளி மிஸ் டீன் யூனிவர்ஸ் 2024 பட்டத்தை த்ரிஷ்னா ராய் தட்டி சென்றார். இவர் ராணுவ அதிகாரியின் மகள் ஆவார். பேஷன் டெக்னாலஜி படித்துக் கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய அழகிக்கான போட்டியிலும் த்ரிஷ்னா ராய் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கதாகும்.