தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் 300 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை சுகுமார் இயக்கி இருந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க  நடிகை ஸ்ரீ லீலா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவான நிலையில் கடந்த 6-ம் தேதி வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்த படம் ரிலீஸ் ஆகி 6 நாளில் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்திருந்த நிலையில் தற்போது 1409 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளதாக பட குழு அறிவித்துள்ளது. அதன்படி படம் ரிலீஸ் ஆகி 11 நாட்களில் 1409 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளது.

இந்திய சினிமாவில் மிகக்குறைந்த அளவில் அதிக வசூல் சாதனை புரிந்த படம் என்ற பெருமையை புஷ்பா 2 பெற்றுள்ளது. மேலும் அல்லு அர்ஜுன் சமீபத்தில் பிரீமியர் ஷோ நிகழ்ச்சியின் போது ரசிகை ஒருவர் உயிரிழந்ததற்காக கைது செய்யப்பட்ட நிலையில் அந்த சம்பவம் சர்ச்சையாக மாறியது. இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படம் வசூல் வைத்தையும் புரிந்து வருவது அவருடைய ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.