பிரபாஸ் நடிப்பில் கடைசியாக ரிலீசான கல்கி 2898 AD திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகிய 1100 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. இந்த படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது மாருதி இயக்கத்தில் பிரபாஸ் தி ராஜாசாப் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதிக்குமார் சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.

இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது. வருகிற டிசம்பர் 5ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. தற்போது தி ராஜாசாப் திரைப்படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்துள்ளனர்.