பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற துளசிமணி முருகேசன், வெண்கல பதக்கம் வென்ற மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு 2024 ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று தடகள வீராங்கனை அன்னு ராணி, செஸ் வீராங்கனை வந்திகா அகர்வால், பாரா ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் பதக்கங்கள் வென்ற நித்யஸ்ரீ சுமதி சிவன், நிதேஷ்குமார் உட்பட 32 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே போன்று  தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற குகேஷ், மனு பாக்கர், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் சிங், பிரவீன் குமார் மற்றும் மேஜர் தியான் ஆகியோருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.