இயக்குனர் ஜியோ பேபி தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். இவர் நடிகர் மம்முட்டி நடிகை ஜோதிகா ஐயோரை வைத்து காதல் தி கோர் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தை மம்முட்டி தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் உருவாக்கினார். தன் பாலின உணர்வாளர்களின் குடும்பத்தினரும், சமூகத்தினரும் அவர்களை எப்படி எதிர்கொள்கின்றனர் என்ற கேள்விகளுடன் காதல் திரைப்படம் உருவாகிறது.

வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு நேர்த்தியான கதாபாத்திரங்களை இயக்குனர் தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளார். இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான புதுச்சேரி அரசின் சிறந்த படத்திற்கான விருதை காதல் தி கோர் திரைப்படம் பெறுகிறது. சங்கரதாஸ் சாமிகள் பெயரிலான அந்த விருதை இயக்குனர் ஜியோ பேபிக்கு வருகிற 13-ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி வழங்க உள்ளார்.