
ஊரக வளர்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். அவர் கூறியதாவது, திமுக ஆட்சியில் ஊரக குடியிருப்பு திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. 2021- 22 ஆண்டு வரை வரை 3,61,591 வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இதுவரை 3,43,959 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
கிராம சாலை திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. ஒன்றிய அரசிடம் இருந்து நிதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்படுகிறது. உடனடியாக நிதியை விடுவிக்க திஷா குழு வலியுறுத்த வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.