
உலக கோப்பை இறுதியிபோட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு ரோஹித் ஷர்மா உள்ளிட்ட வீரர்கள் கண்கள் கலங்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது..
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6வது முறையாக சாம்பியன் ஆனது. கடந்த 2003-ம் ஆண்டைப் போலவே ஆஸ்திரேலிய அணி இந்தியாவின் சாம்பியன் கனவை முறியடித்தது. தோல்விக்குப் பிறகு ரசிகர்கள் ஏமாற்றத்துடன் காணப்பட்டாலும், கேப்டன் ரோஹித் சர்மாவால் கூட உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்கள் ஈரமாகின.
இந்தியாவின் தோல்விக்கு பிறகு நாடு முழுவதும் விரக்தி ஏற்பட்டது. மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களின் நம்பிக்கையும் தகர்ந்ததுடன், இந்தியா சாம்பியன் ஆக வேண்டும் என்ற கனவும் தகர்ந்தது. டிரஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பிச் செல்லும்போது, ரோஹித்தாலும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்கள் ஈரமாகின. டிரஸ்ஸிங் ரூம் நோக்கி செல்லும் போது ரோஹித்தின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது :
ரோஹித் ஏமாற்றமடைந்து அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரோஹித் தவிர விராட் கோலி மற்றும் முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்களும் கண்கள் கலங்கி சோகமாக காணப்பட்டனர்.. சிராஜுக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆறுதல் கூறினார். இந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இதயத்தை நொறுங்கச் செய்கிறது.
Rohit and Virat. 💔 pic.twitter.com/XLh1PjQHcw
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 19, 2023
This man gave his everything in this World Cup to bring glory, but unfortunately we couldn't win.
This sport is cruel, very cruel when you're Virat Kohli. 🥲 pic.twitter.com/CJ1HSs7ovr
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 19, 2023
This team and this captain surely deserved a better ending. 💔 pic.twitter.com/EkQ1HDTo6z
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 19, 2023
Rohit Sharma and Virat Kohli crying is the last thing i expected from this world cup, anyone please go and give them a tight hug 😭❤#INDvsAUS pic.twitter.com/qF9O4VzJ0W
— 𝐕. (@whenvsayshii) November 19, 2023
kl falling to his knees, siraj, shami, bumrah holding onto each other because they couldn't stop crying, virat trying to control his tears, rohit on the verge of crying 🙁 this is beyond heartbreaking but we are still VERY PROUD of you @ict . it's okay. chin up kings 👑❤️🩹 pic.twitter.com/mJvYIfWji4
— shreya (@_Lazy_being) November 19, 2023
Kohli – 765 runs.
Rohit – 597 runs.
Iyer – 530 runs.
Rahul – 452 runs.
Gill – 350 runs.
Shami – 24 wickets.
Bumrah – 20 wickets.
Jadeja – 16 wickets.
Kuldeep – 15 wickets.
Siraj – 14 wickets.
This team given everything, played well٫ won or lose we Always stand with you Jai hind pic.twitter.com/oHkBG5lmRr— salman khan sal⚡ (@salmankhan3638) November 19, 2023