தமிழகத்தில் போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு பணபலன் வழங்க தமிழக அரசு 38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பண பலனில் ஒரு பகுதியை அதாவது 50% பிஎப் வழங்க 38.73 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

இதற்காக அரசு நிதி வழங்க வேண்டும் என்று போக்குவரத்து துறை தலைவர் அலுவலகத்திலிருந்து கடிதம் பெறப்பட்டது. இதனை கவனமாக பரிசீலனை செய்த அரசு 38 கோடியை 73 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணையிடுவதாக கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.