மும்பையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தில், இளைஞர் ஒருவர் மீது பொய் போதைப்பொருள் வழக்கு பதிவு செய்ய முயன்ற நான்கு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, போலீஸ் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட இளைஞர் டேனியல் கூறுகையில், போலீசார் முதலில் அவரை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டியதாகவும், பின்னர் அவர்களின் செயல் கேமராவில் பதிவாகியுள்ளதை உணர்ந்து அவரை விடுவித்ததாகவும் தெரிவித்தார்.

இந்த சம்பவம், போலவே போக்கிரி படத்தில் விஜய்க்கும் வில்லன் போலீஸ் க்கும் இடையில் இதே மாதிரியான காட்சி இடம் பெற்றிருக்கும் சினிமா போல நிஜ வாழ்வில் நடப்பது பொதுமக்கள் மத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.